27 June 2013

தண்ணீர் கேன் விழுந்து 2 வயது குழந்தை பலி

தண்ணீர் கேன் விழுந்து 2 வயது குழந்தை பலி

திருவான்மியூர், ஜூன். 27:-

துரைப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. வேன் டிரைவர். இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களது மகள் ரம்யா (வயது 2). நேற்று இரவு வீட்டில் இருந்த குடிநீர் காலியாகி விட்டது. இதையடுத்து ராஜாமணி அருகில் உள்ள கடையில் இருந்து தண்ணீர் கேனை வாங்கி தோளில் தூக்கி வந்தார்.

அப்போது வீட்டு வாசலின் மேல் பகுதி மீது தண்ணீர் கேன் இடித்தது. இதனால் நிலைதடுமாறிய அவர் தண்ணீர் கேனை கீழே தவறவிட்டார். அது தரையில் தூங்கிய ரம்யா தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவள் மூச்சு திணறி மயங்கினாள்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாமணியும் அவரது மனைவி ராஜலட்சுமியும் கதறி அழுதபடி குழந்தை ரம்யாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான ரம்யா, ராஜாமணி- ராஜலட்சுமி தம்பதியின் ஒரே மகள் ஆவார்.

0 Responses to “தண்ணீர் கேன் விழுந்து 2 வயது குழந்தை பலி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT