27 June 2013

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீஸ்-இலங்கை அணிகள் நாளை மோதல்

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி 

வெஸ்ட்இண்டீஸ்-இலங்கை அணிகள் நாளை மோதல் 


கிங்ஸ்டன், ஜூன் 27:-

                                இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது. 

இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் மோதுகின்றன. 

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இலங்கை அணி அரை இறுதி வரை நுழைந்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி 'லீக்' ஆட்டத்துடன் வெளியேறியது. இரு அணிகளும் 49 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. இதில் வெஸ்ட்இண்டீஸ் 26 ஆட்டத்திலும், இலங்கை 20 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 3 ஆட்டம் முடிவு இல்லை. 

இரு அணி வீரர்கள் விவரம்:- 

வெஸ்ட்இண்டீஸ்: பிராவோ (கேப்டன்), கிறிஸ் கெய்ல், சார்லஸ், டாரன் பிராவோ, சாமு வேல்ஸ், போலார்ட், டாரன்சேமி, ராம்தின், சுனில் நரீன், கேமர்ரோச், ராம்பால், தேவன் சுமித், டினோபெஸ்ட். 

இலங்கை: மேத்யூஸ் (கேப்டன்), சண்டிமால், ஜெயவர்த்தனே, சங்ககரா, திரிமானே, உபுல் தரங்கா, குலசேகரா, மெண்டீஸ், தில்கரா, எரங்கா, ஜீவன் மெண்டீஸ், குஷால் பெரைரா, செனயாகவே. 

3 நாடுகள் போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் இருந்து ஜமைக்கா சென்றது. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதால் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 30-ந்தேதி எதிர்கொள்கிறது. 

3 நாடுகள் போட்டியின் முதல் 3 ஆட்டம் ஜமைக்காவிலும் (கிங்ஸ்டன்), அடுத்து 4 ஆட்டங்கள் டிரினிடாட்டிலும் (போர்ட் ஆப் ஸ்பெயின்) நடக்கிறது. டென் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

0 Responses to “3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீஸ்-இலங்கை அணிகள் நாளை மோதல்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT