28 June 2013

திருவனந்தபுரத்துக்கு வேலை தேடி வந்த இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 4 ஆட்டோ டிரைவர்கள் கைது

திருவனந்தபுரத்துக்கு வேலை தேடி வந்த இளம் பெண்ணை 

கடத்தி கற்பழித்த 4 ஆட்டோ டிரைவர்கள் கைது 


திருவனந்தபுரம், ஜூன் 28:-

                       திருவனந்தபுரம் அருகே உள்ள காசர்கோடு நீலகேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் வேலை தேடிதிருவனந்தபுரத்திற்கு சென்றார். திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் இரவு சென்று இறங்கிய அந்த பெண்ணுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை.

இதனால் அவர், பஸ் நிலையத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் திலீப் (வயது 26) அந்த பெண்ணிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார். அவரை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டதும், தன்னுடன் வந்தால் நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக திலீப் கூறினார்.

அவரை நம்பி ஆட்டோவில் ஏறி அந்த பெண் சென்றார். அவர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றார். அங்கிருந்த சகுந்தலா என்ற பெண்ணிடம் அவரை ஒப்படைத்து விட்டு திலீப் வெளியில் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து திலீப் தனது ஆட்டோவில் மீண்டும் அங்கு வந்தார்.

இந்த முறை அவர் தன்னுடன் பிரசாந்த், மகேஷ், சஜீவ் ஆகிய 3 ஆட்டோ டிரைவர்களையும் அழைத்து வந்திருந்தார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து சகுந்தலா வீட்டில் அடைக்கலம் அடைந் திருந்த அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர்.

இதேபோல 4 நாட்கள் அந்த பெண்ணை அந்த வீட்டில் அடைத்து வைத்து இவர்கள் கற்பழித்துள்ளனர். இதற்கு சகுந்தலாவும் உடந்தையாக இருந்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை பஸ் நிலையம் பகுதியிலேயே இறக்கி விட்டு விட்டு இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டிய திலீப் தப்பி சென்றுவிட்டார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனம் நொந்த அந்த பெண் நடந்த சம்பவங்களை திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அந்த பெண் கூறிய அடையாளத்தை வைத்து திலீப்பையும், மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த சகுந்தலாவும் கைது செய்யப்பட்டார்

0 Responses to “திருவனந்தபுரத்துக்கு வேலை தேடி வந்த இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 4 ஆட்டோ டிரைவர்கள் கைது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT