24 June 2013

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்

சாம்பியன்ஸ் டிராபி

இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 

இந்திய அணி சாம்பியன்


 லண்டன்:

 லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ்  டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் செய்தார்.ஆனால் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் பல மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.


இதன் பின்னர் போட்டி துவங்கியது. ரோகித் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் உடனடியாக மழை நிற்கவே ஆட்டம் மீண்டும் துவங்கியது. இந்திய அணி 6.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யவே ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது.


இதன் பின்னர் ஆட்டம் துவங்கிய து. இதன் பினனர்
ஷிகார் தவான் 31 ரன்னிலும்,
தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும்,
சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும்,
கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார்கள்.
விராட் கோஹ்லி நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்தர ஜடேஜா 33 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 124 மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

குக் 2 ரன்னிலும்,

இயான் பெல் 13 ரன்னிலும்,

டிராட் 20 ரன்னிலும்

மோர்கன் 33 ரன்னிலும்

போபாரா 30 ரன்னிலும்

அவுட்டானார்கள்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஸ்கோர்போர்டு 

இந்தியா                  : 20 ஓவரில் 129 / 7.


இங்கிலாந்து         : 20 ஓவரில் 124 / 8. 

0 Responses to “சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT