28 June 2013

புதுச்சேரி To கன்னியாகுமரி, மும்பை To காரைக்கால், கோவை To ராமேஸ்வரம் விரைவு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கும், 

மும்பையில் இருந்து காரைக்காலுக்கும் ,  கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கும்
விரைவு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு 


சென்னை, ஜூன் 28:- 

புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கும், மும்பையில் இருந்து காரைக்காலுக்கும் விரைவு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 

புதிய ரெயில்கள் சேவை குறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

மும்பையில் இருந்து காரைக்காலுக்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சென்னை, விழுப்புரம் வழியாக காரைக்கால் சென்றடையும். 

இதேபோல் புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு வியாழன் தோறும் விரைவு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் விழுப்புரம், கும்பகோணம், சிவகங்கை வழியாகச் செல்லும்.

திருப்பதியில் இருந்து விழுப்புரம், திருவண்ணமலை வழியாக புதுச்சேரிக்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரயில் இயக்கப்படும். 

பழனி-திருச்செந்தூர் இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட உள்ளது.

எழும்பூர்-தஞ்சாவூர் புதிய ரெயில் விரைவில் இயக்கப்படும். 

செவ்வாய்க்கிழமை தோறும் கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு விரைவு ரயில் சேவை தொடங்கப்படும். இந்த ரெயில் திருச்சி, புதுக்கோட்டை வழியாக செல்லும். 

பெங்களூரில் இருந்து கரூர், மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு தினசரி விரைவு ரெயில் இயக்கப்படும். 

இந்த புதிய ரெயில்களின் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.05க்கு பதில் 8.10க்கு புறப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 Responses to “புதுச்சேரி To கன்னியாகுமரி, மும்பை To காரைக்கால், கோவை To ராமேஸ்வரம் விரைவு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT