20 July 2013

சனி, புதன் கிரகங்களிலிருந்து பூமியை விண்கலம் படம் பிடித்தது : நாசா புதிய முயற்சி

சனி, புதன் கிரகங்களிலிருந்து பூமியை விண்கலம் படம் பிடித்தது
நாசா புதிய முயற்சி


லாஸ் ஏஞ்சலஸ், ஜூலை 20:

             அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் புதன் மற்றும் சனி கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது. கஸ்சினி விண்கலம் சனியின் சுற்று வட்டத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மெஸ்செஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த விண்கலங்கள் மூலம் பூமியை புகைப்படம் எடுக்க நாசா திட்டமிட்டது.

கஸ்சினி விண்கலம் நேற்று புகைப்படம் எடுத்த போது வட அமெரிக்காவில் பகல் பொழுதாக இருந்தது. மெஸ்செஞ்சர் விண்கலம் இன்று புகைப்படம் எடுக்கும் போது ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் பகல் நேரமாக இருக்கும்.

இந்த புகைப்படம் எடுக்கும் போது மக்கள் வானத்தைப் பார்த்து கையசைக்க வேண்டும் என்று நாசா கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து நேற்று லாஸ் ஏஞ்சல்சில் உள்ள விண்வெளி ஆய்வகம் முன்பு குறிப்பிட்ட நேரத்தில் கூடிய மக்கள் சனி கிரகம் உள்ள தென் கிழக்கு திசை நோக்கி வானத்தைப் பார்த்து கையசைத்தனர். விண்கலங்கள் எடுத்த புகைப்படங்கள் பூமியை வந்தடைய சில வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது

0 Responses to “சனி, புதன் கிரகங்களிலிருந்து பூமியை விண்கலம் படம் பிடித்தது : நாசா புதிய முயற்சி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT