20 July 2013
பா.ஜ.,பிரமுகர்கள் தொடர் கொலை: சுஷ்மா -மோடி கண்டனம்; 22 -ல் பந்த்
Do you like this story?
பா.ஜ.,பிரமுகர்கள் தொடர் கொலை: சுஷ்மா -மோடி கண்டனம்; 22 -ல் பந்த்
புதுடில்லி:
தமிழகத்தில் பா.ஜ.,பிரமுகர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவர் நநேரந்திர மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும், இதற்கு பின்னால் திரை மறைவு காரியங்களில் ஈடுபட்டு வருவோரை சிறையில் தள்ள வேண்டும் என்றும் பா.ஜ.க.,வினர் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ். இவர் பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களை ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். இவருக்கென தனி செல்வாக்கு உண்டு. யாரிடமும் பகை இல்லாமல் இருந்து வந்துள்ளார். அவருக்கென கட்சியினர் மத்தியில் நல்ல பெயர் உண்டு. இவரா கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த கொலைச்சதியில் உள்ள நபர்களை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
சேலம் மரவனேரி இரண்டாவது கிராசில், பா.ஜனதா கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இரவு, 9.30 மணிக்கு வீட்டில் இருந்து, நடந்தே அலுவலகத்துக்கு சென்றுள்ளார். மர்ம நபர்கள் சிலர், இவரை பின் தொடர்ந்துள்ளனர். ரமேஷ் வழக்கம் போல, அலுவலகத்தின், கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, திடீரென்று மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து ஆயுதங்களால், கண் இமைக்கும் நேரத்தில், தலை, கழுத்து, கைகள் என சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில், ரமேஷ் சரிந்து விழுந்து இறந்தார்.
காவலாளியிடம் விசாரித்தனர்: இந்த கொலை தொடர்பாக பா.ஜ., அலுவலக காவலாளியிடம் விசாரித்ததில் , கொலையாளிகள் 4 பேர் வரை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அனைவரும் மிக குறைந்த வயதுடையவராகவே இருந்தனர். இதற்கு மேல் அவரால் எந்தவொரு அடையாளமும் சொல்ல முடியவில்லை.
கடைகள் அடைப்பு: பதட்டம் :
கொலை செய்யப்பட்ட ரமேஷ் உடல் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு பா.ஜ.,கட்சியினர் குவிந்துள்ளனர். இவரது கொலையை கண்டித்து ஈரோடு, சேலம், திருப்பூர், நெல்லை மாவட்டம் தென்காசி, வள்ளியூர், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நகர்ப்பகுதியில் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாகை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

.
வரும் 22 ம் தேதி மாநில பந்த்: ரமேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 22 ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது . இது குறித்து மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: இது போன்று தொடர்ந்து நடந்து வரும் கொலைக்குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். ரமேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 22 ம் தேதி மாநில அளவில் பந்த் நடக்கிறது. இதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்றுடன் 3 வது சம்பவம் :
கடந்த ஒரு மாதத்தில் பா.ஜ.,பிரமுகர் கொல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது. வேலூர், குமரி மாவட்டத்திலும் 2 கொலைகள் நடந்தன. இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த 1 ம் தேதி இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை விசாரிக்க 6 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கம்ப்யூட்டர் மூலம் படம் வரைய முயற்சி இன்னும் நடந்து வருகிறது, எவ்வித க்ளூவும் கிடைக்கவில்லை.

இது போல் வேலூரில் கடந்தாண்டு மாநில மருத்துவ அணி செயலர் அரவிந்த் ரெட்டி கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகள் சிக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் , முன்னாள் மாநில பா.ஜ., தலைவர் எம்.ஆர்.,காந்தி வெட்டப்பட்டார், இந்த கொலை முயற்சியில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி நாகையில் மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி வெட்டி கொல்லப்பட்டார்.
கொலையாளிகள் யார் ?
இது போன்ற கொலையில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது, துல்லியமாக துப்பு கிடைக்காத அளவிற்கு கொலையாளிகள் செயல்படுகின்றனர். மேலும் இதில் கூலிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. வேலூரில் வெள்ளையப்பனை கொலை செய்த நபர்களே இன்றைய கொலையையும் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பா.ஜ.வை பலவீனப்படுத்தும் நோக்கில் இந்த கொலைகள் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

முழு விசாரணை வேண்டும் ’- சுஷ்மா :
தமிழகத்தில் நடந்து வரும் பா.ஜ., பிரமுகர் கொலை, தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக முழு அளவில் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி கண்டனம்: தமிழக கொலைகள் குறித்து இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இக்கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கோபியில் நிருபர்களிடம் பேசுகையில்; கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் பா.ஜ., மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றார்.
மோடி கண்டனம்:
இந்த கொலை குறித்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியிருப்பதாவது: பா.ஜ., செயலர் ரமேஷ் கொலை குறித்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து தமிழக தலைவரிடம் கேட்டறிந்தேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தலைவர்கள் அஞ்சலி:
கொலையுண்ட ரமேஷ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர், தமிழக மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவரான இல.கணேசன், ராஜா,உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். டில்லியில் இருந்து பா.ஜ., மூத்த நிர்வாகி வெங்கையாநாயுடு வரவுள்ளதாக தெரிகிறது.
சேலத்தில் 14 பஸ்கள் கண்ணாடி உடைப்பு :
இவர் கொலையுண்ட செய்தி கேள்விப்பட்டதும், பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. மொத்தம் 14 பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.எஸ்.பி., உதயக்குமார், இன்ஸ்பெக்டர் கண்ணன், வெங்டேசன், சூரியமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மசூதி அருகே பாதுகாப்பு :
ரமேஷ் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அச்சம்பட்டி பகுதியில் மசூதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நேரத்தில் டென்சன் எதுவும் ஏற்படாமல் தடுக்க கமிஷனர் மகாளி தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்து அனைவரும் அமைதியாக செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “பா.ஜ.,பிரமுகர்கள் தொடர் கொலை: சுஷ்மா -மோடி கண்டனம்; 22 -ல் பந்த்”
Post a Comment