26 August 2013

சென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்! விஐபிகள் ரூட்டில் அட்டகாசம்

சென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்! 
 விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் 
              முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இருட்டு ஏரியாவில் நடந்து வந்த பாலியல் தொழில்
, இப்போது ரொம்பவே முன்னேறி விட்டது. விஐபிக்கள் வந்து செல்லும் ரூட்டில் அதுவும் இரவு 8 மணிக்கே ஆரம்பித்து விடுகிறது

எங்கு தெரியுமா... அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதீட்ரல் சாலையில் நடக்கிறது இந்த கூத்து.

ஜீன்ஸ், டிசர்ட் என அல்ட்ரா மார்டன் டிரஸ்களிலும், சேலை உடுத்தி மல்லிகை பூ சூடியும் பாலியல் தொழிலாளிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதுவும் இரவு 8 மணிக்கே இவர்கள் ஆஜராகி விடுகிறார்கள். ரோட்டில் செல்லும் யாரையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. வாகனங்களில் செல்பவர்களை பார்த்து சிரிப்பதும், சைகை செய்து அழைப்பதும் போன்ற செய்கைகளால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றனர்.

‘இந்த சாலையில் கடந்த சில நாட்களாகத்தான் இவர்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வரிசையாக 10க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறங்களிலும் நிற்கிறார்கள். தனியாக செல்லும் ஆண்களை மட்டுமில்லாமல் குடும்பத்துடன் செல்பவர்களை பார்த்தும் சிரித்து அழைக்கிறார்கள். இதனால் மனைவி, குழந்தைகளை இவ்வழியாக அழைத்துச் செல்லவே சங்கோஜமாக இருக்கிறது. இவர்கள் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்களையும் விட்டு வைப்பதில்லை. அங்கும் முகாமிட்டு பஸ்சுக்காக காத்திருப்பவர்களை அழைக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை பார்ப்பதால்தான் இளைய சமுதாயம் சீரழிகிறது’ என்று ஆதங்கப்படுகிறார் கதீட்ரல் சாலை வழியாக தினமும் சென்று வரும் வாகன ஓட்டி ஒருவர்.

கால்டாக்சி டிரைவர் ஒருவர் கூறுகையில்,  

                    ‘இவ்வழியாகத்தான் ஏராளமான விஐபிக்கள் வந்து செல்கிறார்கள். அரசியல் கட்சியினர், போலீஸ் உயர் அதிகாரிகள் என பலரும் செல்கிறார்கள். இப்படிப்பட்ட முக்கியமான சாலையிலேயே பாலியல் தொழில் அமோகமாக நடக்கிறது. இதுவரை எந்த போலீசாரும் இவர்களை தட்டிக்கேட்டதாக தெரியவில்லை. தினமும் இந்த இடத்தில்தான் கம்பெனி ஊழியர்கள் பிக்&அப்புக்காக ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருப்பேன். போலீசார் வருவார்கள், போவார்களே தவிர, யாருமே பாலியல் தொழிலாளர்களை விரட்டியது கிடையாது’ என்கிறார்.

பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்கள் கூறுகையில், 

                           ‘இந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருக்கும் எங்களையும் சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இந்த பஸ் ஸ்டாப்புக்கு வரவே பயமாக இருக்கிறது. சுத்தமாக பாதுகாப்பே இல்லாத மாதிரி இருக்கிறது. எப்போது என்ன நடக்குமோ என பதறுகிறோம்‘ என்கின்றனர்.

சில சமயங்களில், கஸ்டமர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் இடையே அடிதடி சண்டையும் அரங்கேறுகிறதாம். ‘2 நாளுக்கு முன்னாடி ஒருத்தர் ரேட் பேச வந்தாரு. அவங்களுக்குள்ள பேச்சு எல்லைமீறி கைகலப்பில முடிஞ்சது. பாலியல் தொழிலாளர்களும், அவங்களோட புரோக்கரும் சேர்ந்து அந்த ஆளை தர்ம அடி கொடுத்தாங்க. அப்பவும் எந்த போலீசாரும் வரவில்லை. பொதுமக்களும் நமக்கேன் பிரச்னை என ஒதுங்கிதான் நிற்க வேண்டியிருக்கு’ என்கிறார் ஒருவர்.

எனவே, பொதுமக்களுக்கு தொல்லை தரும்வகையில் இருக்கும் அழகிகளை விரட்ட போலீசார் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


இங்க மட்டுமில்ல

நுங்கம்பாக்கம் கதீட்ரல் சாலை மட்டுமின்றி சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பாலியல் தொழில் கொடி கட்டிப்பறக்கிறது. சோழிங்கநல்லூர் சிக்னல் மற்றும் காரம்பாக்கம் பகுதிகளில் சாலையில் பட்டப்பகலிலேயே திருநங்கைகள் தொல்லை அதிகரிக்கிறது. சூளைமேடு, இந்திரா நகர் ரயில் நிலையம், வடபழனி சிக்னல், பஸ் நிலையம், விருகம்பாக்கம், திநகர் என அனைத்து முக்கிய இடங்களிலும் இரவானதும் இவர்களது தொல்லைக்கு அளவில்லாமல் போகிறது. இதற்கு முடிவு கட்ட போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏனோ?

0 Responses to “சென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்! விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT