19 September 2013
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம்
Do you like this story?
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம்
சென்னை, செப். 19:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதிகளில் வேறு தேர்வு நடைபெற உள்ளதால், அக்டோபர் 25, 26 மற்றும் 27ம் தேதிக்கு முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், இந்து சமய அறநிலையத்துறையின் 4-ம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வு அக்டோபர் 26-ல் இருந்து நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம்”
Post a Comment