9 November 2013

இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி
 


கொல்கத்தா : 

             வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அறிமுக வேகம் முகமது ஷமி மொத்தம் 9 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. டாசில் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ், முதல் இன்னிங்சில் 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன் எடுத்திருந்தது. ஒரு கட்டத்தில் 83 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய அணியை ரோகித் , கேப்டன் டோனி ஜோடி ஓரளவு மீட்டது. டோனி 42 ரன் எடுத்து ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய அஷ்வின் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ரோகித் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார்.

ரோகித் 127, அஷ்வின் 92 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக விளையாடிய அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு     380 ரன் சேர்த்தது. ரோகித் 177 ரன் (301 பந்து, 23 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 124 ரன் (210 பந்து, 11 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். புவனேஷ்வர் 12, ஷமி 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இந்தியா முதல் இன்னிங்சில் 453 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. ஓஜா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஷில்லிங்போர்டு 6, பெருமாள் 2, காட்ரெல், பெஸ்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 219 ரன் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2வது  இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேல், பாவெல் களமிறங்கினர். கேல் 33 ரன் எடுத்து புவனேஷ்வர் பந்துவீச்சில் கோஹ்லி வசம் பிடிபட்டார்.

பாவெல் , பிராவோ ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 68 ரன் சேர்த்தது. பாவெல் 36 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் 4 ரன் மட்டுமே சேர்த்து ஷமி வேகத்தில் வெளியேற, பிராவோ 37 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ரோகித்திடம் பிடிபட்டார். ஒரு முனையில் அனுபவ வீரர் சந்தர்பால் நங்கூரம் பாய்ச்சி உறுதியுடன் நிற்க, மற்ற வீரர்கள் ஷமி , அஷ்வின் கூட்டணியிடம் எதிர்ப்பின்றி சரணடைந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 54.1 ஓவரில் 168 ரன்னுக்கு சுருண்டது. சந்தர்பால் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அபாரமாகப் பந்துவீசிய அறிமுக வேகம் ஷமி 5, அஷ்வின் 3, புவனேஷ்வர் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வென்று 1,0 என முன்னிலை பெற்றது. அறிமுக டெஸ்டில் 177 ரன் விளாசிய ரோகித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடைசி டெஸ்ட் மும்பை வாங்கடே மைதானத்தில் 14ம் தேதி தொடங்குகிறது. இதில் தனது 200வது டெஸ்டில் விளையாடும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
 
ஸ்கோர் விவரம்

 
வெ. இண்டீஸ் முதல் இன்னிங்ஸ்                         234

இந்தியா முதல் இன்னிங்ஸ்
தவான்    (பி) ஷில்லிங்போர்டு    23
எம்.விஜய்    (எஸ்டி.) ராம்தின் (பி) ஷில்லிங்போர்டு    26
புஜாரா    (சி) ராம்தின் (பி) காட்ரெல்    17
சச்சின்    எல்பிடபுள்யு (பி) ஷில்லிங்போர்டு    10
கோஹ்லி    (சி) பாவெல் (பி) ஷில்லிங்போர்டு    3
ரோகித்    எல்பிடபுள்யு (பி) பெருமாள்    177
டோனி    (சி) ராம்தின் (பி) பெஸ்ட்    42
அஷ்வின்    (பி) ஷில்லிங்போர்டு    124
புவனேஷ்வர்    (சி) கேல் (பி) ஷில்லிங்போர்டு    12
ஷமி    (எஸ்டி.) ராம்தின் (பி) பெருமாள்    1
ஓஜா    (ஆட்டமிழக்கவில்லை)    2
உதிரிகள்        16
மொத்தம்    (ஆல் அவுட், 129.4 ஓவர்)    453

விக்கெட் வீழ்ச்சி: 1,42, 2,57, 3,79, 4,82, 5,83, 6,156, 7,436, 8,444, 9,451, 10,453.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு: பெஸ்ட் 17,0,71,1, காட்ரெல் 18,3,72,1, ஷில்லிங்போர்டு 55,9,167,6, பெருமாள் 23.4,2,67,2, சம்மி 12,1,52,0, சாமுவேல்ஸ் 4,0,12,0.

வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்ஸ்
கிறிஸ் கேல்    (சி) கோஹ்லி (பி) புவனேஷ்வர்    33
பாவெல்    எல்பிடபுள்யு (பி) அஷ்வின்    36
டேரன் பிராவோ    (சி) ரோகித் (பி) அஷ்வின்    37
சாமுவேல்ஸ்    எல்பிடபுள்யு (பி) ஷமி    4
சந்தர்பால்    (ஆட்டமிழக்கவில்லை)    31
ராம்தின்    (சி) விஜய் (பி) ஷமி    1
சம்மி    (பி) ஷமி    8
ஷில்லிங்போர்டு    (பி) ஷமி    0
பெருமாள்    (ரன் அவுட்)    0
பெஸ்ட்    (சி) ஓஜா (பி) அஷ்வின்    3
காட்ரெல்    (பி) ஷமி    5
உதிரிகள்        10
மொத்தம்    (ஆல் அவுட், 54.1 ஓவர்)    168

விக்கெட் வீழ்ச்சி: 1,33, 2,101, 3,110, 4,120, 5,125, 6,152, 7,152, 8,152, 9,159, 10,168.
இந்தியா பந்துவீச்சு: புவனேஷ்குமார் 6,1,20,1, முகமது ஷமி 13.1,0,47,5, அஷ்வின் 19,2,46,3, பிரக்யான் ஓஜா 13,3,27,0, சச்சின் 3,0,18,0.
ஆட்ட நாயகன்: ரோகித் ஷர்மா

0 Responses to “இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT