12 December 2013

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.14 கோடியில் டிஜிட்டல் மின் சீரமைப்பு திட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 
ரூ.14 கோடியில் டிஜிட்டல் மின் சீரமைப்பு திட்டம் 


இராமநாதபுரம்:

                  இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் ரூ.14 கோடி செலவில் டிஜிட்டல் மின் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சீரமைப்பு திட்டம்

தமிழகத்தில் மின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக் கும் வகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கவும், தடையில்லா மின்சாரம் வினியோகிக்கவும், மின் இழப்பை குறைக்கவும் திருத் தியமைக்கப்பட்ட, விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மின் இழப்பை தடுக்கவும், மின் வினியோக தொடர் அமைப்பினை மேம்படுத்தவும், மின் நுகர்வோர் பற்றிய விவரங்களை சேகரிக்கவும், புதிய மின் மாற்றிகள் அமைக் கவும், மின் பாதைகளை வலிமைப்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.

தற்போது 35 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள பகுதிகளில் இந்த திட் டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் 110 நகரங்களில் இத் திட்டம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு இந்த நிதியாண் டில் 87 நகரங்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி, இராமேசுவரம், கீழக் கரை ஆகிய 4 நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதிகளில் டிஜிட்டல் மின் வரைபடத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு வருகின் றன.

விவரங்கள்

இதையொட்டி இணைப்பு பெற்றுள்ள அனைத்து வீடுகளின் விவரங்கள், மின் பயன் பாடு, மின் மீட்டர், மின் மாற்றிகள் விவரம், மின் கம்பங்களின் எண்ணிக்கை, மின் பணியாளர்கள், தொடர்பு எண்கள், ரேஷன் கார்டு எண் உள் ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதற்கென தனியாக வடிவமைக்கப் பட் டுள்ள தனி மென்பொருளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன மூலம் குறிப் பிட்ட பகுதியில் மின்தடை, குறைந்த மின் அழுத்தம் போன்றவை ஏற்பட்டால் அதனை சரி செய்ய வழி ஏற்படும்.

மேலும் இந்த பதிவு முறையால் சிறப்பு அம்சமாக டிஜிட்டல் மின் மீட்டர் கணக்கீடு முறை செயல்படுத்தப்பட உள் ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் மின்கணக் கீட்டாளர் டிஜிட்டல் மீட்டரில் ஒரு இடத்தில் இருந்தே அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடு மற்றும் கடை போன்றவற்றில் பயன்பாட்டு அளவினை கணக்கிட்டு பதிவு செய்ய முடியும். இது தவிர மின்மாற்றிகளில் புதிய தொழில் நுட்ப மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறிப்பிடட பகுதிகளில் எவ்வளவு மின்சாரம் சப்ளையாகிறது? மின் நுகர்வு எவ்வளவு? போன்ற விவரங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

ரூ.14 கோடி ஒதுக்கீடு

இதற்காக இராமநாதபுரத்தில் 84 மீட்டர்களும், பரமக்குடி யில் 70 மீட்டர்களும், கீழக்கரையில் 30 மீட்டர்களும், இராமேசுவரத்தில் 45 மீட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மின் நுகர்வு, மின் இழப்பு குறித்து தெளிவாக கணக்கிட முடியும். மின் இழப்பு கண்டறியப்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்திட் டத்தின் கீழ் அந்த பகுதிகளின் தேவைக்கு ஏற்ப சிறிய அள விலான மின் மாற்றிகளும், வீட்டுக்கு வீடு ஒரு சிறிய மின் மாற்றிகளும் அமைக்கப்படும். இதற்காக 16 கிலோவாட் முதல் 63 கிலோவாட் வரையிலான மின் மாற்றிகள் அனுமதி வழங் கப்பட்டுள்ளன. இதனால் மின் பழுது மற்றும் பராமரிப்பால் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும்.

தற்போது இராமநாதபுரத்தில் 22.27 சதவீதமும், பரமக்குடி யில் 17.27 சதவீதமும், கீழக்க ரையில் 17.66 சதவீதமும், இராமேசுவரத்தில் 28.77 சதவீ தமும் மின் இழப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இழப்பை 15 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்துக்கு பரமக்குடி நீங்கலாக மற்ற 3 நக ராட்சிகளுக்கும் ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் சீரான மின்வினியோகம் செய்யப்படுவதுடன் மின்இழப்பு குறைக்கப்படுவதால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

0 Responses to “இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.14 கோடியில் டிஜிட்டல் மின் சீரமைப்பு திட்டம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT