13 December 2013

இராமநாதபுரம் அருகே பரபரப்பு : ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியது

இராமநாதபுரம் அருகே பரபரப்பு : 
ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியது




இராமநாதபுரம்: 

             உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஆளில்லாத ரோந்து விமானம் நேற்று தென்னந்தோப்பில் விழுந்து நொறுங்கியது. இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் கடந்த 2009ம் ஆண்டு  ‘ஐஎன்எஸ் பருந்து‘ கடற்படை விமானத் தளம் உள்ளது. இங்கிருந்து ஹெலிகாப்டர்கள், ரோந்து விமானங்கள், ஆளில்லாத ரோந்து உளவு விமானங்கள் மற்றும் சிறிய ரக போர் விமானங்கள் ஆகியன இயக்கப்பட்டு கடற்பகுதி கண்காணிக்கப்படுகிறது.

இந்த விமான தளத்தில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஆளில்லாத ரோந்து உளவு விமானம் இயக்கப்பட்டது. வானில் பறந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் மாலை 3 மணிக்கு விமானத்தளம் அருகே உள்ள உசிலங்காட்டுவலசை கிராமத்தில் முனியாண்டி என்பவரது வீட்டின் அருகே தென்னந்தோப்பில் திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தின் இறக்கைகள், இன்ஜின்கள் ஆகியன சேதமடைந்தன.

இந்த உளவு விமானம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுவதால், விபத்தை உடனடியாக அறிந்த பைலட் மற்றும் கமாண்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். நொறுங்கிய விமானத்தின் பாகங்களை கடற்படை வீரர்கள் ஒவ்வொன்றாக பிரிந்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். விபத்துக்குள்ளான இந்த விமானம் 12 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டது. இதன் விலை குறைந்தபட்சம் ரூ.1 கோடி என்றும், இஸ்ரேல் நாட்டிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கமாண்டர் அபிஜித் பர்கட்டாஜி கூறியதாவது, ‘‘ விமானத்தளத்தில் இருந்து இயக்கப்பட்ட விமானம் விபத்துக்கு ள்ளாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்,‘‘ என்றார்.

0 Responses to “இராமநாதபுரம் அருகே பரபரப்பு : ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT