10 December 2013

ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு

ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு


புதுடெல்லி:

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங் கட்சியாக உள்ளது. 

2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், 3–வது இடத்திற்குத் தள்ளப்பட்ட காங்கிரசுக்கு 8 இடங்களும் உள்ளன. பெரும்பான்மை பலம் கிடைக்காததால், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. இதனால் அங்கு மறு தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

பா.ஜனதா கூட்டணி கட்சியான அகாலிதளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.

ஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்ச தேவையான 36 எம்.எல்.ஏ.க்கள் பலம் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் டெல்லியில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

0 Responses to “ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT