20 December 2013

கு.க., ஆப்பரேஷனுக்குப்பின் "குவா.. குவா..': இழப்பீடு வழங்கிய குடும்ப நலத்துறை: பணத்தை திருப்பி அனுப்பிய பெண்

கு.க., ஆப்பரேஷனுக்குப்பின் "குவா.. குவா..':
 இழப்பீடு வழங்கிய குடும்ப நலத்துறை: பணத்தை திருப்பி அனுப்பிய பெண்

  
மானாமதுரை: 

               மானாமதுரை அருகே டி.ஆலங்குளம் ஊராட்சி டி.பறையங்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார்,37. இவரது மனைவி திலகவதி, 28. இவர்களுக்கு,ஹேமமாலினி, 5, நதியா, 3, என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

திலகவதி, அரசு திட்டத்தில் நிதியுதவி பெற, செப்., 2009 ல் பூவந்தி அரசு மருத்துவமனையில் கு.க., ஆப்பரேஷன் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் கூறியுள்ளார். 

தவறான சிகிச்சையால், மீண்டும் கர்ப்பம் தரித்தது குறித்து கேள்வி கேட்ட திலகவதிக்கு, கிராம நர்சுகள் சிகிச்சை அளிக்க மறுத்ததுடன், அரசு நிதியுதவியை ரத்து செய்வோம், என மிரட்டியுள்ளனர். 

மேலும் கர்ப்பத்தை கலைக்கவும் முயற்சித்துள்ளனர். இதுகுறித்து, மதுரை ஐகோர்ட் கிளையில் திலகவதி வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் உத்தரவுப்படி, அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில், பாதுகாப்பான பிரசவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

கடந்த நவ., 28 ல் அவருக்கு, மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. ஏழ்மை நிலையில், 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு, ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திலகவதி கோரியுள்ளார்.

 சிவகங்கை மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில், டிச., 4 ல், இழப்பீடாக ரூ.30 ஆயிரத்திற்கான "டிடி' அனுப்பினர். 

இதை ஏற்காத திலகவதி, ரூ. 30 ஆயிரத்திற்கான டி.டி.,யை, பதிவுத்தபாலில் திருப்பி அனுப்பி விட்டார்.

0 Responses to “கு.க., ஆப்பரேஷனுக்குப்பின் "குவா.. குவா..': இழப்பீடு வழங்கிய குடும்ப நலத்துறை: பணத்தை திருப்பி அனுப்பிய பெண்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT