15 December 2013

கோலாகலம் - திரை விமர்சனம்

கோலாகலம் - திரை விமர்சனம் 


கல்லூரியில் படிக்கும் அமலும், சரண்யாவும் நெருங்கிய நண்பர்கள். அமலுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல். அந்த காதலுக்கு சரண்யா உதவுகிறார். ஆனால் அந்த பெண், இன்னொருவருக்கு நிச்சயமாக, அமலின் காதல் தோற்கிறது. 

அமலின் குடும்பமும், சரண்யாவின் குடும்பமும் வெவ்வேறு ஜாதி. ஆனாலும் நட்பால் ஒன்றாக இருக்கிறார்கள். சரண்யாவின் அக்கா திருமணத்துக்கு அமல் செல்கிறார். அங்கு மாப்பிள்ளையின் தம்பி, சரண்யாவுக்கு டார்ச்சர் கொடுக்கிறான். இதைத் தட்டிக் கேட்கிறார் அமல். இதனால் ஆத்திரமடையும் சரண்யாவின் அப்பா, நட்பை விட ஜாதிதான் உயர்ந்தது என்று கூறி அமலை அடிக்கிறார்.

அவன் முறைப்பையன். அவனுக்கு அவளை டார்ச்சர் பண்ண உரிமை இருக்கு.நீ வெறும் நண்பன்தான், உன் ஜாதி வேறு, என் ஜாதி வேறு என்று பேசிவிடுகிறார். நட்பை ஜாதியால் பிரிக்கும் அவர்களுக்கு பாடம் புகட்ட அமலே, சரண்யாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அது நடந்ததா என்பது மீதி கதை.



புதுமுகம் அமல் ஹீரோவுக்குரிய லட்சணங்களோடு இருக்கிறார். காதல் உணர்வை அழகாக காட்டுகிறார். ஆனால் நடிக்கத்தான் சிரமப்படுகிறார். சரண்யா மோகன் அமலுக்கு சரியான ஜோடி.


நட்பாய் பழகியவன் திடீரென்று காதல் கல்யாணம் என்று மாறியதும் அதிர்ச்சி காட்டும்போது மட்டும் நடிக்கிறார். மற்றபடி நடிக்க வாய்ப்பில்லை.


ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருந்துகொண்டு மனைவி தேவதர்ஷினிக்கு பணிவிடை செய்யும் கஞ்சா கருப்பு, சிரிக்க வைக்கிறார். இருவரும் வரும் காட்சிகள் கலகல ரகம்.


கணவனை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி, மனைவியை சில்க் என்று அழைக்கும் கணவன் என்று புதுமையான கணவன், மனைவியாக பாண்டியராஜ், லட்சுமி கலகலப்பூட்டுகிறார்கள். 


கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். பரணியின் இசையில் பழைய வாசனை. காதல், மோதல், சென்டிமென்ட், நட்பு,  பாட்டு என கோலாகலமான படத்தை தர முயன்றிருக்கிறார்கள் .

0 Responses to “கோலாகலம் - திரை விமர்சனம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT