17 December 2013

காஞ்சிரங்குடி, பரமக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரேஷன்கடை-அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை

காஞ்சிரங்குடி, பரமக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  
ரேஷன்கடை-அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை
 
இராமநாதபுரம் 17:

      பரமக்குடி அருகே தெத்தூரில் ரேஷன்கடை அமைக்க வேண்டும், காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கீர்அப்பாதர்கா, மீனவர் குடியிருப்பு பகுதிகளில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன் முன் னிலை வகித்தார். 

கூட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள அ.புத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊர் தலைவர் வேலுச்சாமி தலைமையில் கொடுத்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:- 

         எங்கள் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேசன்கடை செயல்பட்டு வருகிறது. புத்தூர் முத்துச்செல்லாபுரம், வாழவந்தான்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 360 ரேஷன் கார்டுதாரர்கள் அத்தியா வசிய பொருட்களை பெற்று வந்தோம். இந்தநிலையில் எங் கள் பகுதியில் இயங்கி வந்த தலைமை ரேஷன் கடையை துணைகடையாக மாற்றி அரியகுடி கடையுடன் இணைத்து விட்டனர். 

இதனால் மாதத்துக்கு 3 நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கி வருகின்றனர். தலைமை ரேஷன் கடையாக இருப்பதற்கு தேவையான கார்டுகள் இருக் கும்போது துணைகடையாக மாற்றியதால் அவதி அடைந்து வருகிறோம். எனவே எங்கள் ரேஷன் கடையை ஏற்கனவே உள்ளது போல் தலைமை ரேஷன் கடையாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் காளிமுத்து ஆதித்தன் தலை மையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கீர்அப்பாதர்கா, மீனவர்குடியிருப்பு மற்றும் முத்தரய்யர் ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல தயார்நிலையில் உள்ளனர்.

அங்கன்வாடி மையம்

இவர்கள் மழலையர் கல்வி கற்க 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காஞ்சிரங்குடி அங்கன்வாடி மையத்துக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் தூரத்தை காரணம் காட்டி மேற்கண்ட பகுதியை சேர்ந்த குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்காமலேயே முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டு வரு கின்றனர். எனவே மேற் கண்ட பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

திருவாடானை தாலுகா இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி தலை மையில் ஏராளமான தொழிலாளர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 

                திருவாடானை தாலுகாவில் சனவெளி, திருவேகம்பத்தூர், எஸ்.பி.பட்டினம் ஆகிய கிராமங்களில் அரசு அனுமதி பெற்று மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வாழ்க்கை நடத்திவந்தோம். இதற்காக ஒரு நடை மணலுக்கு ரூ.42 கட்டணம் செலுத்தி முறையாக டோக்கன் பெற்று மணல் அள்ளிவந்தோம்.

நடவடிக்கை

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக மணல் அள்ள தடை விதித்து விட்டனர். இத னால் இந்த தொழிலை நம்பி இருந்த 100 மாட்டுவண்டி தொழிலா ளர்களும் பிழைப்பு நடத்த முடியாமல் அவதி அடைந்து வருகிறோம்.

 எனவே மேற்கண்ட பகுதியில் மாட்டு வண்டிகள் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

0 Responses to “காஞ்சிரங்குடி, பரமக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரேஷன்கடை-அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT