Showing posts with label சினிமா செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா செய்திகள். Show all posts

27 December 2013

வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் நடிக்கும் ‘ஏய்,’ 2–ம் பாகம்

வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் நடிக்கும் ‘ஏய்,’ 2–ம் பாகம் 


வெங்கடேஷ் டைரக்க்ஷனில் சரத்குமார்- நமீதா நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஏய். இதில் ஒருபுறம் நமீதா கவர்ச்சியில் கலக்கி இருந்தாலும் மற்றொரு புறம் வடிவேலு காமெடியில் அசத்தி இருப்பார். இவர்களுக்கு இணையாக சரத்குமாரின் ஆக்க்ஷனும் படத்தில் இடம் பெற்றிருக்கும். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

 ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஸ்க்ரிப்டை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ். இந்தக் கதையில் சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த படத்தில், சரத்குமார் மிக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். இதற்காக, ஹாலிவுட் மேக்கப்மேன் ஒருவர் வரவழைக்கப்படுகிறார். ‘ஏய்’ படத்தில் இடம்பெற்ற மற்ற நட்சத்திரங்களையும் ‘ஏய்–2’ படத்தில் கொண்டு வருவது பற்றி விவாதம் நடந்து வருகிறது!

ஏய் முதல் பாகத்தில் நடித்த நமீதா, வடிவேலு ஆகியோரை அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இரண்டு கதாநாயகிகளும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

27 December 2013 by Unknown · 0

26 December 2013

சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி

சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி




நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள, இந்தி நடிகர் ஆமிர்கானின் 'தூம்-3' உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரை 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக '3 இடியட்ஸ்', 'ஏக் தா டைகர்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'கிரிஷ்-3' குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் 'கிரிஷ்-3' திரையிடப்பட்ட நான்காவது நாளில் 100 கோடியைத் தொட்டது. ஆனால் 'தூம்-3'யோ திரையிடப்பட்ட மூன்றாவது நாளிலேயே நூறு கோடியைத் தாண்டியுள்ளது.

தயாரிப்பு செலவு ரூ.250 கோடி என்று கணக்கீடுகள் காட்டப்பட்டிருக்க திரையிடப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே ரூ.313 கோடி வசூலாகியுள்ளது இந்தப் படம் எவ்வளவு தூரம் பொதுமக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.


பாகிஸ்தானில் சமீபத்தில் இந்தியப் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் அளிக்கக்கூடாது என்ற உத்தரவுகளைத் தாண்டி இந்தப் படம் வெளியானது. அங்கு பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் தொடர்ச்சியாக ஐந்து காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பது படத்தின் தலைப்புக்கேற்ற அதன் ஆரவாரமான வெற்றியைக் குறிப்பிடுகின்றது. கராச்சியில் மட்டும் 20 மில்லியன் வசூல் செய்துள்ள இப்படம் சென்ற மாதம் அங்கு திரையிடப்பட்ட 'வார்' படத்தின் சாதனையையும் முறியடித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

வார மத்தியில் வந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாளிலும் 23.75 கோடி ரூபாய் வசூலைக் குவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சமீபத்திய வெற்றியை தற்போது ஆமிர்கான் முறியடித்துள்ள நிலையில் இவரது வெற்றியை மற்றொரு நட்சத்திரம் முறியடிக்க முயற்சிப்பதன் மூலம் இந்தித் திரையுலகில் ஆரோக்கியமான போட்டிகளும், வெற்றிகளும் ஏற்படக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

26 December 2013 by Unknown · 0

பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்

பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்




பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சேனல் ஒன்றின் ‘பிக்பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் வீணா மாலிக் இந்தியாவில் பிரபலம் ஆனார். இந்த நிலையில் வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார்.

தொழில் அதிபரான ஆசாத்பஷீர்கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் வீணாமாலிக்கின் தந்தையின் நண்பரின் மகன் ஆவார். திருமணம் பற்றி வீணா மாலிக் கூறுகையில், இது பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண் நானாகத்தான் இருப்பேன்.

இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள். மற்ற விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன்’’ என்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை துபாய், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வீணா மாலிக் தெரிவித்தார்.


by Unknown · 0

24 December 2013

எதிர்ப்பை மீறி நீலப்பட நடிகை சன்னிலியோன் தமிழ் படத்தில் நடித்தார்

எதிர்ப்பை மீறி நீலப்பட நடிகை சன்னிலியோன் தமிழ் படத்தில் நடித்தார்




வெளிநாடுகளில் நீலப்படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னிலியோன். நூற்றுக்கும் மேற்பட்ட ‘செக்ஸ்’ படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது இந்திப்படங்களில் அரைகுறை ஆடையில் நடித்து வருகிறார். சன்னிலியோனை தமிழில் தயாராகும் ‘வடகறி’ படத்தில் குத்துப் பாடலுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடந்தன.


இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். சரவணன் இயக்குகிறார். சன்னிலியோன் தமிழ் படத்தில் நடிக்க இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நீலப்பட நடிகையை தமிழ்படத்தில் நடிக்க வைப்பது கலாசார சீரழிவுக்கு வழிவகுத்து விடும் என கண்டனங்கள் எழுந்தன. இதனால் சன்னிலியோன் இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.


தற்போது எதிர்ப்பை மீறி சன்னிலியோன் இந்த படத்தில் நடித்தார். ஜெய், சன்னிலியோன் இணைந்து ஆடிய குத்தாட்ட பாடல் காட்சியை பாங்காக்கில் படமாக்கியுள்ளனர். தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் படப்பிடிப்பை பாங்காக்கில் நடத்தியதாக கூறப்படுகிறது.

சன்னிலியோனுடன் ஜெய் நடனம் ஆடுவது மாதிரி கனவு காண்பது போல் இக்காட்சியை அமைத்துள்ளனர். இதனால் எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆலோசிக்கின்றனர்.

24 December 2013 by Unknown · 0

23 December 2013

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி
 ஆஸ்பத்திரியில் அனுமதி



தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தமிழில் 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய இசை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும். சிம்பொனி இசையில் சாதனை புரிந்திருக்கும் இவரது இசை உலகமெங்கும் பரவி உள்ளது.

‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கடந்த 30-வருடங்களுக்கும் மேலாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இன்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நலம் மெல்ல தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.

23 December 2013 by Unknown · 0

22 December 2013

பிரியாணி திரை விமர்சனம்

பிரியாணி  திரை விமர்சனம் 




டிராக்டர் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் கார்த்தி, பிரேம்ஜி. ஆரணியில் அதன் கிளை திறப்பு விழாவுக்கு செல்லும் இருவரும் விழா முடிந்ததும், குடித்துக் கொண்டே திரும்புகிறார்கள்.  வழியில் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஒரு கடையில் நிறுத்துகிறார்கள் காரை. 


அதே கடைக்கு விலை உயர்ந்த காரில் வரும் மாண்டி தாக்கர், அவர்களை தனக்கு கம்பெனி கொடுக்க கேட்கிறாள். ஜொள்ளு பார்ட்டிகளான இருவரும் அவள் பின்னால் சென்று ஆடிப்பாடி குடித்து தீர்க்கிறார்கள். விடிந்து பார்த்தால், கூத்தடித்த அறையில் துப்பாக்கி, ரத்தக் கறை. போதையில் என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. போலீஸ் வரவும் ஓடுகிறார்கள்.



 அவர்களின் கார் டிக்கியில் தொழில் அதிபர் நாசரின் பிணம். பிரியாணிக்கு ஆசைப்பட்டு கொலை பழியில் சிக்கும் இவர்கள், எப்படி அதிலிருந்து மீள்கிறார்கள். இந்த சதிவலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள்.பெண்களை கண்டவுடன் கரெக்ட் பண்ணும் கேரக்டரை ஹீரோ இமேஜ் பாதிக்காமல் நாசுக்காகச் செய்கிறார் கார்த்தி. பெண்கள் விஷயத்தில் பிரேம்ஜியை உசுப்பேற்றியே ரணகளமாக்குற கார்த்தியின் அலப்பறைகளும், பிரேம்ஜியின் புலம்பல்களும் ‘ஏ’ கிளாஸ் காமெடி.

கார்த்தியின் அந்த சிரிப்பும், தலைசாய்த்த நடையுமான டிரேட் மார்க் மேனரிசம் அவ்வப்போது எட்டிப்பார்த்து விடுகிறது.படம் முழுக்க நிறைந்திருக்கிறார் பிரேம்ஜி. படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். குளோஸ்&அப்பில் பேசி பேசி வெறுப்பேற்றுகிறார். கார்த்திக்குக்கு பிரச்னை வரும்போது களத்தில் குதிக்கையில் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். ஹன்சிகா வழக்கம்போல அழகு பொம்மை. பிற்பகுதியில் கதை ஆக்ஷனுக்குள் சென்று விடுவதால் அவ்வப்போது சில காட்சிகளில் வந்து போகிறார்.ஒரு காதல். அதனால் இரண்டு பெரிய சக்திகளுக்கு இடையேயான மோதல்.

அதற்குள் அப்பாவிகளான கார்த்தியையும், பிரேம்ஜியையும் மாட்ட வைத்தல், பூனையாக இருந்தவர்கள் புலியாக மாறி எதிரிகளை பந்தாடுதல் என்ற பரபர திரைக்கதையில் யூகிக்க முடியாத கிளைமாக்சால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் இயக்குனர். நாசர் மாதிரி மாஸ்க் போட்டு பிரேம்ஜி நடிப்பதெல்லாம் ஓல்டு ஐடியாவாக இருந்தாலும் நாசரின் நடிப்பால் சுவாரஸ்யமாகிறது. அந்த கடைசி நேர ட்விட்ஸ் கணிக்க முடியாதது. ஆனால், ‘அட இதுக்காகவா இவ்ளோ சுத்தி வளைச்சு கதை சொன்னாங்க என்று கேட்கத் தோன்றுகிறது.


போலீசை குடைந்தெடுக்கும் அந்த சிசிடி கேமரா காட்சி, சும்மா போதையில் பண்ணிய அலப்பறை என்று அவிழ்ப்பது ஏமாற்றம். அதைப் பதிவு செய்த கேமரா, கொலையாளியை பதிவு செய்யாமல் போனது ஏன்? திடீரென்று வரும் உமா ரியாஸ்கான் கேரக்டர், ஒட்டவே இல்லை. பிரச்னைகளுக்கு காரணமான மாண்டி தாக்கர், பாலியல் தொழிலாளியா? நாசரின் ஆசை நாயகியா? என்பதில் குழப்பம். யுவனின் 100&வது படம் என்கிறார்கள். அதற்கான எந்த மெனக்கெடலும் தெரியவில்லை. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, பிரியாணிக்கு கலர் கொடுத்திருக்கிறது.

22 December 2013 by Unknown · 0

20 December 2013

11–வது சர்வதேச படவிழா நிறைவு நாள் புகைப்படங்கள்

11–வது சர்வதேச படவிழா நிறைவு நாள் புகைப்படங்கள்























20 December 2013 by Unknown · 0

சர்வதேச படவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், தங்க மீன்கள்–ஹரிதாஸ் ஆகிய 2 படங்களுக்கும் விருதுகள்

சர்வதேச படவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், 
தங்க மீன்கள்–ஹரிதாஸ் ஆகிய 2 படங்களுக்கும் விருதுகள்




சென்னை:

சர்வதேச படவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், தங்க மீன்கள்–ஹரிதாஸ் ஆகிய 2 படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

சர்வதேச படவிழா

11–வது சர்வதேச படவிழா, சென்னையில் கடந்த 12–ந்தேதி தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 8 நாட்களாக நடந்த இந்த விழாவில், 58 நாடுகளை சேர்ந்த 163 படங்கள் திரையிடப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று இரவு நடந்தது. அதில், கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ராம் டைரக்டு செய்து, ஜே.சதீஷ்குமார் வெளியிட்ட ‘தங்க மீன்கள்’ படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாருக்கு ரூ.1 லட்சமும், டைரக்டர் ராமுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.


‘ஹரிதாஸ்’

டாக்டர் ராமதாஸ் தயாரித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்த ‘ஹரிதாஸ்’ படத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. தயாரிப்பாளர் டாக்டர் ராமதாஸ், டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

பாலா டைரக்டு செய்த ‘பரதேசி’ படத்தில் நடித்தற்காக அதர்வாவுக்கு விசேஷ விருது வழங்கப்பட்டது. ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்த சிறுமி சாதனா, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடித்த சிறுவன் பிருதிவிராஜ் ஆகிய இருவருக்கும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இசையமைப்பாளர் அனிருத்துக்கு அமிதாப்பச்சன் விருது வழங்கப்பட்டது.

ஸ்ரீப்ரியா



விருது பெற்றவர்களின் பெயர்களை, நடுவர் குழுவில் ஒருவரான நடிகை ஸ்ரீப்ரியா அறிவித்தார். நடிகர் கார்த்தி, நடிகை அனுஹாசன் ஆகிய இருவரும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.




விழாவில் நடிகைகள் சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், இந்தி டைரக்டர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.



by Unknown · 0

நடிகை ராதா மீது நடவடிக்கை பாய்கிறது: பைசூல் மீதான புகார் திடீர் வாபஸ்

பைசூல் மீதான புகார் திடீர் வாபஸ் 
நடிகை ராதா மீது நடவடிக்கை பாய்கிறது


சென்னை: 

              தொழிலதிபர் மீது கொடுத்த செக்ஸ் புகாரை நடிகை ராதா திடீரென வாபஸ் வாங்கி உள்ளார்.சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 22ம் தேதி புகார் அளித்தார். 

அதில், ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். என் இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று மாற்றிக்கொண்டேன். 2008ல் எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர், திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை  சினிமா தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து வைத்தார். தான் தயாரிக்கும் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்த பைசூல் என் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்.


என்னை நேசிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் அவர் ஆசை வார்த்தை கூறினார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். நான் கர்ப்பமானேன். பின்னர் அவர் கூறியபடி கருவை கலைத்தேன். பின்னர், வைர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக என்னிடம் வாங்கிய 50 லட்சத்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டால் என்னுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். 

பின்னர், இந்த புகார்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.தொடர்ந்து பைசூலின் சகோதரி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 1 கோடி கொடுத்தால் புகாரை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இல்லையெனில் கொலை செய்துவிடுவதாகவும் ஒரு கும்பல் என் சகோதரரை மிரட்டுகிறது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பைசூல் அளித்த 3 முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் வடபழனி காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ராதா, பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக எழுதிக்கொடுத்தார். உடனே போலீசார், ‘நீங்கள் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லுங்கள்’ என்றனர். ஆனால் ராதா பதில்கூறாமல் சென்றுவிட்டார். 

பைசூல் மீதும், போலீசார் மீதும் குற்றம் சாட்டி வந்த நடிகை ராதா திடீரென புகாரை வாபஸ் வாங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பைசூல் மீது கொடுத்தது பொய் புகாரா? அல்லது சமரசம் என்ற பெயரில் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு  வாபஸ் பெற்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராதா அளித்தது பொய் புகாராக இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


by Unknown · 0

16 December 2013

காம்னா ரகசிய திருமணம்

காம்னா ரகசிய திருமணம் 



தமிழில், இதயத் திருடன், மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா படங்களில் ஹீரோயினாக நடித்தவர் காம்னா ஜெத்மலானி. மும்பையில் வசிக்கும் இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இது இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. 


தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகை சேர்ந்தவர்களுக்கு காம்னா தன் திருமணம் குறித்து தெரிவிக்கவில்லை.

16 December 2013 by Unknown · 0

15 December 2013

இவன் வேறமாதிரி - திரை விமர்சனம்

இவன் வேறமாதிரி - திரை விமர்சனம் 


       சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலுக்கு காரணமான சட்ட அமைச்சரை பழிவாங்க நினைக்கிறார் ஹீரோ. தனது அரசியல் வளர்ச்சிக்கு பலமாக இருக்கும் தம்பியை, ஒரு கொலை செய்வதற்காக பரோலில் எடுக்கிறார் அமைச்சர். குறிப்பிட்ட நாளில் அவரை மீண்டும் சிறையில் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஆனால் திடீரென்று அந்த தம்பியை கடத்தி, அடைத்து வைக்கிறார் ஹீரோ. பிரச்னை பெரிதாகிறது. பதவியை இழக்கிறார் அமைச்சர். பிறகு தம்பியை விடுவிக்கிறார் ஹீரோ. இதையடுத்து தம்பி, ஹீரோவையும் ஹீரோவின் காதலியையும் என்ன செய்தார் என்பது படம்.துணிச்சல் கொண்ட இளைஞனாக விக்ரம் பிரபு.


வில்லன் வம்சியை புத்திசாலித்தனமாகக் கடத்துவது, பிறகு அவரது அசுரத்தனமான தாக்குதலுக்கு ஈடுகொடுத்து பதிலடி கொடுப்பது என ஆக்ஷன் ஹீரோவுக்கான அஸ்திவாரத்தை பலமாகப் போட்டிருக்கிறார்.


காதல் காட்சிகளில் நாகரீகமும், நளினமும் பளிச்சிடுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் காதலியின் கையெழுத்தைப் போடுவதும், பஸ்சில் தான் கொடுத்த மீன் தொட்டியைப் பாதுகாக்கும் வகையில் காதலி கொடுக்கும் நீண்ட பில்லைக் கண்டு மலைப்பதும் சுவாரஸ்ய ஏரியா.


சுரபி புதுமுகம் என்று நம்ப முடியவில்லை. அரியர்சை வைத்துக்கொண்டு, அம்மாவிடம் மாட்டி தவிப்பது, விக்ரம் பிரபுவிடம் ஐ லவ் யூ சொல்லச் சொல்லி அராஜகம் செய்வது, வம்சி கிருஷ்ணாவிடம் மாட்டிக்கொண்ட பிறகு கலங்குவது என நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.


கெட்ட அமைச்சராக வரும் ஹரிராஜன், ஓ.கே. ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார், வம்சி கிருஷ்ணா. தன்னைக் கடத்தியவனின் பைக்கிலேயே பயணிக்கும் அவர், அடையாளம் கண்டதும் பாயும் காட்சி புல்லரிக்க வைக்கிறது.


அமைச்சருக்கு பயப்படாமல், அவர் தம்பிக்கு வலைவிரிக்கும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராம் கச்சிதம்.18 மாடி கட்டிடத்தை இப்படியும் காட்டி பயமுறுத்த முடியும் என்பதில் சக்தியின் கேமரா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறது. இரும்பு பைப்புகள் முகத்தைப் பதம் பார்ப்பது போன்ற பிரமை.


சத்யாவின் ரீரெக்கார்டிங் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சுரபியின் பாங்க் அக்கவுன்ட் நம்பரை வைத்து, விக்ரம் பிரபுவைக் கண்டுபிடிக்கும் வில்லன்களின் டெக்னிக், டச். சட்ட அமைச்சரின் நடவடிக்கைகள் எல்லாம் அரதப் பழசு. மெகா கட்டிடப் பணி நடக்கும் இடத்தில் ஒரே ஒரு வாட்ச்மேன் இருப்பதும், பிறகு அவர் கொல்லப்படுவதை யாரும் கண்டுகொள்ளாததும் நெருடல்.


வில்லன் கோஷ்டி போலீசாரை வரிசையாக போட்டுத் தள்ளிக்கொண்டே போவதும் யாரும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் வழக்கம் போல இதிலும் நடக்கிறது.

15 December 2013 by Unknown · 0

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT