18 June 2013

மூளைச்சாவு இன்ஜினியரிங் மாணவன் உடல் உறுப்புகள் தானம் : 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது

மூளைச்சாவு இன்ஜினியரிங் மாணவன் உடல் உறுப்புகள் தானம்

  7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது 


திருச்சி: 

                          திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் செல்வபுரம் முதல் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சின்னண்ணன். பேக்கரி ஒன்றில் காசாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன்கள் ராமச்சந்திரன் (19), ரவிச்சந்திரன் (19). இரட்டையரான இச்சகோதரர்கள் திருச்சி அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.


ஒரு மாதத்திற்கு முன் கல்லூரியில் ராமச்சந்திரன் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து ஒரு பலகை அவர் விழுந்தது. தலையில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த ஒரு மாதமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.  

அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். பின்னர், ‘மகனைத் தான் காப்பாற்ற முடியவில்லை. அவனது உறுப்புகள் மூலம் பிறரையாவது வாழ வைக்க உதவுவோம் என முடிவு செய்த ராமச்சந்திரனின் தந்தை சின்னண்ணன், தாய் பொன்னுமணி ஆகியோர் இதுபற்றி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களிடம் தெரிவித்தனர்.இதையடுத்து உடல் உறுப்புகளை தானமாக பெற அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இரவோடு இரவாக நடந்தன. நேற்று அதிகாலை அப்பல்லோ மருத்துவ குழுவினர் ராமச்சந்திரன் உடலிலிருந்து கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இருதய வால்வுகள் என 7 உறுப்புகளை தானமாக எடுத்தனர். 

அந்த உறுப்புகள் 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. அதன்பின் ராமச்சந்திரன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 Responses to “மூளைச்சாவு இன்ஜினியரிங் மாணவன் உடல் உறுப்புகள் தானம் : 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது ”

தொழிற்களம் குழு said...
18 June 2013 at 13:19

ராமச்சந்திரன் இறந்தும் உயிர்வாழ்கின்றார்,,,,,,,,,,,



தொழிற்களம் வாசியுங்கள்


Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT