14 May 2013

ஆட்டோ சங்கர் - வரலாறு 7 (கருணை மனு நிராகரிப்பு)

கருணை மனு நிராகரிப்பு ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்பட்டான் 




தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ சங்கரும், எல்டினும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, சேலம் ஜெயிலில் ஆட்டோ சங்கரை 27_4_1995 அன்று காலை 5_30 மணிக்கும், எல்டினை மதுரை மத்திய சிறையில் 28_4_1995 அன்று காலை 5_30 மணிக்கும் தூக்கில் போட உத்தரவிடப்பட்டது. தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று இருவர் சார்பிலும் கவர்னர் சென்னாரெட்டியிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதுதவிர ஆட்டோ சங்கர் மனைவி ஜெகதீசுவரி, எல்டின் மனைவி சாந்தி ஆகியோர் சென்னை ஐகோர்ட் டில் வக்கீல் ஏ.நடராஜன் மூலம் 2 `ரிட்' மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், "இருவரையும் தூக்கில் போட தடை விதிக்கவேண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும்" என்று கூறி இருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சிவராஜ்படேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் ஜோதி, எதிர்தரப்பில் வக்கீல் ஏ.நடராஜன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். பிறகு 2 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:-

"தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைக்கு, ஐகோர்ட்டில் மனு செய்ய முடியாது. அரசியல் சட்டம் 32_வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டில் தான் மனு செய்யவேண்டும். மேலும் மனுதாரர்கள் கூறும் காரணங் கள் போதுமானதாக இல்லை. தூக்கில் போடுவதற்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது."

இவ்வாறு நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

0 Responses to “ஆட்டோ சங்கர் - வரலாறு 7 (கருணை மனு நிராகரிப்பு)”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT