29 June 2013

அ.தி.மு.கவுக்கு வாக்களித்ததால் தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் :விஜயகாந்த் அதிரடி

அ.தி.மு.கவுக்கு வாக்களித்ததால்  

தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் சஸ்பெண்ட்

 விஜயகாந்த் அதிரடி 


சென்னை, ஜூன் 29:-

சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் தோல்வியடைந்தார்.

சட்டமன்றத்தில் 29 உறுப்பினர்கள் பலம் கொண்ட தே.மு.தி.க. சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் இளங்கோவனுக்கு 22 வாக்குகளே கிடைத்தன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் கட்சியின் கொறடா உத்தரவை மீறி அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிக்கு ஓட்டு போட்டனர்.

இதனால் அவர்கள் மீது கட்சி மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், பாண்டியராஜன், சுந்தர்ராஜன், தமிழழகன், சாந்தி, சுரேஷ்குமார் ஆகிய 7 பேரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

1 Responses to “அ.தி.மு.கவுக்கு வாக்களித்ததால் தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் :விஜயகாந்த் அதிரடி ”

தொழிற்களம் குழு said...
29 June 2013 at 21:18

திரைவிமர்சனம் எழுதலாம் வாங்க - தொழிற்களத்தில் வாசியுங்கள்


Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT