20 July 2013

2015–ல் ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை: சிவதாணுப்பிள்ளை தகவல்

2015–ல் ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை: சிவதாணுப்பிள்ளை தகவல்


இராமநாதபுரம், ஜூலை 20:

                  ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணைக்கான சோதனை நடந்து வருவதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைமை அதிகாரி சிவதாணுப்பிள்ளை கூறினார்.

இராமேசுவரம் மசூதி தெருவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய சோலார் கருவியை தொடங்கி வைத்து சிவதாணுப்பிள்ளை கூறியதாவது:–

நிலத்தில் இருந்தும், கப்பலில் இருந்தும் பாயும் வகையில் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டு, அவை ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 தற்போது விமானத்தில் இருந்து ஏவுகணையை இயக்குவதற்கான ஆராய்ச்சிகளை ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளோம். இதற்கான ஆராய்ச்சி பணிகள் 2015–ல் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.

இப்பணி முழுமை அடைந்தால் நிலம், நீர், வானம் ஆகிய மூன்றிலும் ஏவுகணையை இயக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

விமானத்தில் இருந்து ஏவுகணையை இயக்க வேண்டுமெனில், சுகோஸ் ரக விமானத்தில்தான் அதை பொருத்த முடியும். எனவே சுகோய் ரக விமானத்தில் பொருத்தி அதை இயக்குவதற்கான ஆராய்ச்சிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்த ஏவுகணையானது ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் வகையில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பல்வேறு நாடுகள் இந்த ஏவுகணையை தங்களுக்கு தருமாறு கேட்டு வருகின்றனர்.

அதற்கான விற்பனையை இந்தியா, ரஷ்யா ஆகிய இருநாட்டு அரசுகளும் இணைந்துதான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 Responses to “2015–ல் ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை: சிவதாணுப்பிள்ளை தகவல்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT