16 July 2013

இராமேசுவரம் ரெயில்கள் நேரத்தை மாற்ற வேண்டும்: ம.தி.மு.க. கோரிக்கை

இராமேசுவரம் ரெயில்கள் நேரத்தை மாற்ற வேண்டும்

 ம.தி.மு.க. கோரிக்கை


இராமநாதபுரம், ஜூலை. 16:

                    மானாமதுரை–மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் இராமேசுவரம் ரெயில்கள் பிற ரெயில்களை இணைக்கும் வகையில் ரெயில் நேரங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:–
இராமேசுவரத்திலிருந்து காலை 5.40 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயில் மானாமதுரையில் மானாமதுரை–திருச்சி டெமோ பயணிகள் ரெயிலை இணைக்கும் வகையிலும்,

மதுரையில் திருநெல்வேலி–ஈரோடு ரெயிலை இணைக்கும் வகையிலும்

இராமேசுவரத்தில் பகல் 11.50 மணிக்கு புறப்படும் ராமேசுவரம்–மதுரை பகல் நேர பயணிகள் ரெயில் மானாமதுரையில் மானாமதுரை–மன்னார்குடி பயணிகள் ரெயிலை இணைக்கும் வகையிலும் 

நேரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்

மதுரையில் பகல் 11.50 மணிக்கு புறப்படும் மதுரை–இராமேசுவரம் பயணிகள் ரெயில் மானாமதுரையில் மன்னார்குடி மானாமதுரை பயணிகள் ரெயிலை இணைக்கும் வகையிலும்
நேரங்களை மாற்றியமைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

இதன்மூலம் இராமேசுவரம், ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி, தேவிப்பட்டணம் வந்து செல்லும் யாத்திரிகர்களும், இராமநாதபுரம் மாவட்ட மக்களும் பயன் பெறுவார்கள். ரெயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இராமேசுவரம்–மதுரை–இராமேசுவரம் இடையே பகல் நேரத்தில் புதிதாக இயக்கப்பட்டு வரும் ரெயில்கள் வண்டி எண்.56721, 56722 ஆகிய பயணிகள் ரெயில்களை மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலாந்தரவை, சத்திரக்குடி, குடியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய மக்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். ரெயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

எனவே ம.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியம், போகலூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான சிங்கராசு, பரமக்குடி நகர் செயலாளர் குணா ஆகியோர் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Responses to “இராமேசுவரம் ரெயில்கள் நேரத்தை மாற்ற வேண்டும்: ம.தி.மு.க. கோரிக்கை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT