20 July 2013

இராமேசுவரத்தில் குடும்ப பிரச்சினையில் இளம்பெண் குத்திக்கொலை: கணவர் கைது

இராமேசுவரத்தில் குடும்ப பிரச்சினையில் இளம்பெண் குத்திக்கொலை: கணவர் கைது
 

இராமேசுவரம், ஜூலை. 20:

     இராமேசுவரம் அருகே உள்ள ஏரகாடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 34), வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

இவரது மனைவி வனிதா (29). இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக கோபால் சொந்த ஊருக்கு திரும்பினார்.

ஊர் திரும்பியதில் இருந்தே கோபாலுக்கும், வனிதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கோபால் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும் மனைவி வனிதாவுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு வனிதாவை சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் வனிதா சரிந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த இராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை கொன்ற கோபாலை போலீசார் கைது செய்தனர்.

0 Responses to “இராமேசுவரத்தில் குடும்ப பிரச்சினையில் இளம்பெண் குத்திக்கொலை: கணவர் கைது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT