28 July 2013

இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடிகர் ராமராஜன் ஆவேசம்

இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடிகர் ராமராஜன் ஆவேசம்


இராமநாதபுரம், ஜூலை. 28:

         
இராமநாதபுரத்தில் அ.தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத்தலைவரும், மாவட்ட செயலாளருமான ஜி.முனியசாமி தலைமை வகித்தார். 

இராம்கோ மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவரும், மாவட்ட அவைத்தலைவருமான முருகேசன், 


நகர்மன்ற தலை வரும், மாவட்ட மகளிரணி செயலாளருமான கவிதா,

மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் 

ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தமிழக கைத்தறித்துறை அமைச்சர் டாக்டர் சுந்தர் ராஜன்,  
 தலைமைக்கழக பேச்சாளர் சம்சுன்கனி,  
 திரைப்பட நடிகரும், தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜன்
 
ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது 

ராமராஜன் பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளில் செய்த பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக மாணவ–மாணவியருக்கு லேப்–டாப் அளிக்கும் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கிராம மக்களிடம் ஆடுகள் வழங்கும் திட்டமும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எனவே வரும் நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இராமநாதபுரம் தொகுதி செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, தங்கமரைக்காயர், குப்புச்சாமி, மீனாட்சி சுந்தரம், முத்தையா, முருகானந்தம், நகர் செயலாளர்கள் ராஜேந்திரன், பெருமாள், கணேசன், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்செல்வம், கந்தவேலு, ராஜாராம், பாண்டியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
இராமநாதபுரம் நகர் 
எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வம்
 நன்றி கூறினார்.


0 Responses to “இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடிகர் ராமராஜன் ஆவேசம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT