21 October 2013

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்



சென்னை, அக். 21:


சென்னை மாவட்ட சீனியர் டிவிசன் லீக் போட்டி கடந்த 40 நாட்களாக நடந்தது. இதில் கலந்து கொண்ட அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் அடிப்படையில் மோதின.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ் மற்றும் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப், மத்திய கலால் வரி ஆகிய அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர் சிக்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. போட்டியை சென்னை மாவட்ட ஆக்கி சங்க தலைவரும், முன்னாள் போலீஸ் அதிகாரியுமான பஞ்சாபகேசன் தொடங்கி வைக்கிறார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் வங்கி-தெற்கு ரெயில்வே (பிற்பகல் 2 மணி), மத்திய கலால்வரி-ஐ.சி.எப் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், லீக் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். இதுதவிர சிறந்த வீரர்களுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும்.

இந்த லீக் போட்டி இளம் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் களமாகவும் விளங்கி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் 17 பேருக்கு, தெற்கு ரெயில்வே, வருமானவரி, ஐ.சி.எப். உள்ளிட்ட துறைகளில் வேலை கிடைத்து இருக்கிறது.

இந்த தகவலை சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது போட்டி அமைப்பு குழு சேர்மன் வி.பாஸ்கரன், இயக்குனர் முகமது முனிர் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 Responses to “‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT