6 December 2013

ஜெயம் ரவி நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் ஆடியோ டிசம்பர் 11-ல் வெளியீடு

ஜெயம் ரவி நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் 
ஆடியோ டிசம்பர் 11-ல் வெளியீடு



 சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். மேலும் சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜெயம் ரவி முதன்முதலாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை வரும் 11-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே மொழியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். தெலுங்கில் ஜெயம் ரவி வேடத்தில் ‘நான் ஈ’ படத்தில் நடித்த நானி நடித்துள்ளார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

0 Responses to “ஜெயம் ரவி நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் ஆடியோ டிசம்பர் 11-ல் வெளியீடு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT