9 December 2013

உல்லாசம் அனுபவித்து சொகுசு வாழ்க்கை: ஓய்வு பெற்ற ஆசிரியையின் வங்கி கணக்கில் ரூ.5லட்சம் ‘அபேஸ்’

உல்லாசம் அனுபவித்து சொகுசு வாழ்க்கை: 
ஓய்வு பெற்ற ஆசிரியையின் வங்கி கணக்கில் ரூ.5லட்சம் ‘அபேஸ்’ 
வங்கி உதவி மேலாளர் உள்பட 2 பேர் கைது 




பரமக்குடி:

பரமக்குடியில் ஓய்வுபெற்ற ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5லட்சத்தை அபேஸ் செய்து உல்லாசத்துக்கு செலவழித்த வங்கி உதவி மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.5 லட்சம் அபேஸ்

பரமக்குடி வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணி புரிந்து வருபவர் சவுமிய ரஜ்ஜன்நாயக் (வயது28). இவர் ஒரிசா மாநிலம் கட்டாம்பூர் பகுதியை சேர்ந்தவர். இந்த வங்கியில் பரமக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜம் தனது வங்கிகணக்கில் அதிக பணம் போட்டு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து ரகசிய எண்ணை பயன்படுத்தி 5 லட்சத்து 29 ஆயிரத்து 360 ரூபாயை எடுத்து வங்கி உதவி மேலாளர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தெரியவந்ததும் ஆசிரியயை ராஜம்மாள் அதிர்ச்சி அடைந்தார். தனது கணக்கில் இருந்து ரூ. 5லட்சத்துக்கு மேல் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டது எப்படி? என்று கேட்டு வங்கி கிளை மேலாளர் பாண்டியராஜனிடம் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன் வங்கி கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. இதில் வங்கியின் உதவி மேலாளரே மோசடி செய்து பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.

உல்லாச அனுபவம்

இதையடுத்து வங்கி உதவி மேலாளர் சவுமிய ரஜ்ஜன்நாயக் மீது பரமக்குடி நகர் போலீசில் வங்கி மேலாளர் பாண்டியராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வங்கி உதவிமேலாளர் சவுமிய ரஜ்ஜன்நாயக், வாடிக்கையாளரின் பணத்தை கையாடல் செய்து உல்லாசத்துக்கு செலவழித்து சொகுசாக வாழ்ந்ததாக போலீசில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு அலங்காநல்லூரை சேர்ந்த ரத்தினகுமார் (27) என்பவரும் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் பரமக்குடி நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களது கூட்டாளியான நாராயணன் (65) என்பவரை தேடி வருகின்றனர்.

0 Responses to “உல்லாசம் அனுபவித்து சொகுசு வாழ்க்கை: ஓய்வு பெற்ற ஆசிரியையின் வங்கி கணக்கில் ரூ.5லட்சம் ‘அபேஸ்’”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT