2 December 2013

பரமக்குடி பா.ஜ.க. பிரமுகர் கொலை பக்ருதீன் பிலால்மாலிக் இராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்

பரமக்குடி பா.ஜ.க. பிரமுகர் கொலை பக்ருதீன் பிலால்மாலிக் இராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர் 



இராமநாதபுரம்:

பரமக்குடி பா.ஜ.க. பிரமுகர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பிறகு போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் இராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணை

பரமக்குடியில் கடந்த மார்ச் 19-ந்தேதி பா.ஜ.க. பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணைக்காக இருவரையும் கடந்த 26-ந்தேதி இராமநாதபுரம் ஜே.எம்.-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சி.பி.சி. ஐ.டி. போலீசாரின் கோரிக்கையை ஏற்று நீதிபதி வேலுச்சாமி குற்றவாளிகள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பின்னர் நேற்று அவர்கள் இருவரும் மீண்டும் இராமநாதபுரம் ஜே.எம்.-2 கோர்ட்டில் நீதிபதி வேலுச் சாமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம் போலீ சார் துன்புறுத்தினார்களா? முறையாக உணவு வழங்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்று நீதிபதி கேட் டார். இதற்கு பதிலளித்த அவர்கள் இருவரும் தங்களை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், முறையான உணவு வழங்கி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

மிரட்டல்

ஆனால் எங்களை மிரட்டி வெறும் வெள்ளைத்தாளில் புகைப்படத்துடன் கையெழுத்து வாங்கி நாங்கள் செய்யாத குற்றங்களையும் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். இதுதவிர மேலும் பல புதிய வழக்குகளையும் நாங்கள் செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர். எங்களை தனிமை சிறையில் அடைத்துள்ளதால் அச்ச உணர்வுடன் உள்ளோம். தற்போது வேலூர் சிறையில் உள்ள எங்களை மதுரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வருகிற 16-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் பரமக்குடி பகுதியை சேர்ந்த 7 சாட்சிகளிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையையும், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரின் ஒப்புதல் வாக்கு மூலத்தையும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் புதிதாக சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதி உத்தரவை அடுத்து அவர்கள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் சிறை யில் அடைக்கப்பட்டனர். 

அரசு தரப்பில் வக்கீல் முனி யாண்டியும், போலீஸ் பகுரு தீன், பிலால் மாலிக் தரப்பில் வக்கீல்கள் சேக் இபுராகீம், அப்துல் ஹாலித், அசோகன் ஆகியோர் ஆஜரானார்கள்.

0 Responses to “பரமக்குடி பா.ஜ.க. பிரமுகர் கொலை பக்ருதீன் பிலால்மாலிக் இராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT