18 December 2013

ஐரோப்பாவின் மிகப்பெரிய ரெயில் கொள்ளையன் ரோன்னி பிக்ஸ்வயதில் மரணம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய ரெயில் கொள்ளையன் 
ரோன்னி பிக்ஸ்வயதில் மரணம்
 



வடக்கு லண்டன், டிச.18:


1963 ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய ரயில் கொள்ளையில் ஈடுபட்ட பிரிட்டன் கொள்ளையன் ரோன்னி பிக்ஸ் தனது 84 வயதில் மரணமடைந்தார்.


1963ஆம் வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி லண்டன் மெயில் ரெயிலில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவமான 2.6 மில்லியன் யுரோவை கொள்ளையடித்த கூட்டத்தில் பிக்கும் ஒருவன். இக்குற்றத்திற்காக அவனுக்கு 30 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அங்குள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையிலடைக்கப்பட்ட அவன் 1965ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டான்.

2001 ஆம் ஆண்டு ஐரோப்பியா திரும்பிய அவன் மருத்துவ உதவி கேட்டபோது, அதை மறுத்த அரசு அவனை சிறைக்குள் தள்ளியது. பின்னர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன் கருணை அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டான்.


தனது சக ரெயில் கொள்ளையன் ப்ரூஸ் ரெனால்ட்சின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அவன், பின்னர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலை ஏற்பட்டு நேற்று மரணமடைந்ததாக அவனது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

0 Responses to “ஐரோப்பாவின் மிகப்பெரிய ரெயில் கொள்ளையன் ரோன்னி பிக்ஸ்வயதில் மரணம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT