24 December 2013

அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு நேரில் ஆஜராவதில் தேவயானிக்கு விலக்கு

அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
நேரில் ஆஜராவதில் தேவயானிக்கு விலக்கு


நியூயார்க் : 

                இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகாடே மீதான வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி கோப்ரகாடே. வீட்டு வேலைக்காக பணிப்பெண்ணை உறவினர் என்ற பெயரில் போலி ஆவணங்களை கொடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்தது, அவருக்கு முறையான சம்பளம் அளிக்காதது உள்ளிட்டவை தொடர்பாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக, நியூயார்க்கில் பொது இடத்தில் அவர் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரை வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியாக மத்திய அரசு நியமித்தது. ஐ.நா., தூதராக நியமித்தாலும் அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முடியாது என்று அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில், தேவயானி மீதான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேவயானி சார்பில், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, தேவயானி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 Responses to “அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு நேரில் ஆஜராவதில் தேவயானிக்கு விலக்கு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT