10 December 2013

தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்

தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்





சென்னை: 

              கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம், மூன்றாவது முறையாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது.

அவ்வப்போது, தனது அமைச்சரவையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாற்றம் செய்து வந்தார்.

மாற்றி அமைப்பு

ஆட்சிப்பொறுப்பேற்று, கடந்த 2½ ஆண்டுகளில் 11 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 12–வது முறையாக நேற்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய அமைச்சராக சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இளைஞர் நலம், விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஜெயலலிதா பரிந்துரை கவர்னர் உத்தரவு

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தமிழக அமைச்சரவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் தொடர்பாக கவர்னர் ஆணை பிறப்பித்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:–

விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சராக இருந்து வந்த கே.வி.ராமலிங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.

சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்.

இலாகாக்கள் மாற்றம்

அமைச்சர் பி.வி.ரமணா நிர்வகித்து வரும் வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைதாள் சட்டம் ஆகிய துறைகள் அமைச்சர் எம்.சி.சம்பத் நிர்வாகத்துக்கு மாற்றப்படுகிறது. எம்.சி.சம்பத் இனி வணிகவரிகள் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.

அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நிர்வகித்து வரும் வருவாய், மாவட்ட வருவாய்த்துறை பணியாளர் அமைப்பு, துணை கலெக்டர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்பட கடன் நிவாரணம் சீட்டு நிதிகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்தல் ஆகிய துறைகள் பி.வி.ரமணா நிர்வாகத்துக்கு மாற்றப்படுகிறது. பி.வி.ரமணா இனி வருவாய்த்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

ஆர்.பி.உதயகுமாருக்கு விளையாட்டு, இளைஞர் நலன்

அமைச்சர் எம்.சி.சம்பத் நிர்வகித்துவரும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை, அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. தோப்பு என்.டி.வெங்கடாசலம் இனி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.

அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.

நாளை பதவி ஏற்பு

அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் பதவி ஏற்கும் நிகழ்ச்சி, நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடக்கிறது. 
இவ்வாறு கவர்னர் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


0 Responses to “தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்தமிழக அமைச்சர் பதவியில் இருந்து கே.வி. ராமலிங்கம் நீக்கம்: புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT