10 December 2013

மணமேடைக்கு மப்பில் வந்த மாப்பிள்ளை

மணமேடைக்கு மப்பில் வந்த மாப்பிள்ளை
 

சாத்தான்குளம்: 

                  சாத்தான்குளம் அருகே மது அருந்திவிட்டு போதையில் தாலி கட்ட வந்த மாப்பிள்ளையால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராணி (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் தூத்துக்குடி எம். திரவியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அறிவழகன் என்ற ராமர் (27) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வரதட்சணையாக 10 பவுன் நகையும், 25 ஆயிரம் ரொக்கமும் மணமகள் வீட்டில் கொடுத்திருந்தனர்.

மணமகள் வீட்டில் நேற்று காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் திருமணம் நடைபெற இருந்தது. பெண் வீட்டிற்கு காலை 8 மணிக்கு வரவேண்டிய மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை. ஒருவழியாக காலை 11 மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் இரு வேன்களில் வந்திறங்கினர்.அப்போது, போதையில் தள்ளாடிய மாப்பிள்ளையை 3 பேர், கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வந்தனர். உடனே மணப்பந்தலில் அவரை அழைத்து அமர வைத்தனர். ஆயினும், முழு போதையில் இருந்த அவர் அமர முடியாமல் கீழே விழுந்தார். இதைப் பார்த்த மணப்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் நிறுத்தப்படுவதாக பெண் வீட்டார் கூறினர்.

நீங்கள் வாங்கிய ரொக்கம் 25 ஆயிரம் மற்றும் திருமண செலவு 35 ஆயிரம் சேர்த்து 60 ஆயிரம் தரவேண்டும்‘ என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறினர். இதற்கு மாப்பிள்ளை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

‘அவசரப்பட வேண்டாம். மாப்பிள்ளைக்கு போதை தெளிந்ததும் தாலி கட்ட சொல்கிறோம்‘ என வாக்குவாதம் செய்தனர். இதனால், மேலும் பிரச்னை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தட்டார்மடம் போலீசார் பேசினர். இதில் மாப்பிள்ளை வீட்டார் பணம் தருவதாக தெரிவித்தனர். அதன் பேரில், அவர்களது உறவினர்களிடம் 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் வாங்கப்பட்டது. 

60 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு நகைகளை வாங்கி செல்லலாம் என அவர்களிடம் தெரிவிக்கப்பட் டது. இதையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் அனை வரும் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

0 Responses to “மணமேடைக்கு மப்பில் வந்த மாப்பிள்ளை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT