6 December 2013

தெ.ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி தோல்வி

தெ.ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டி

இந்திய அணி தோல்வி



ஜோகன்னஸ்பர்க்: 

        தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்தது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியின் குவின்டான் டி காக் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் கேப்டன் டி வில்லியர்சுடன் இணைந்த டுமினி, இந்திய பந்துவீச்சை தவிடு பொடியாக்கினார்.

சிக்சரும் பவுண்டரியுமாகப் பறக்கவிட்ட அவர் 25 பந்தில் அரை சதம் அடித்தார். தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. டுமினி 59 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), மில்லர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 50 ஓவரில் 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

தென் ஆப்ரிக்கா வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் அவுட் ஆனார்கள். இறுதியில் இந்திய அணி 41 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில், தென் ஆப்ரிக்க வீரர்கள் வெளிர் ரோஜா வண்ண (பிங்க்) சீருடை அணிந்து களமிறங்கினர்.

0 Responses to “தெ.ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி தோல்வி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT