27 July 2013

இராமநாதபுரம் ரேசன் கடைகளில் பாமாயில் தடை: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலெக்டரிடம் புகார்

இராமநாதபுரம் ரேசன் கடைகளில் பாமாயில் தடை

 ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலெக்டரிடம் புகார் 


இராமநாதபுரம், ஜூலை. 27:

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–


“ஏழை எளிய மக்களின் அன்றாட உணவு பொருட்களை அரசு ரேசன் கடைகள் மூலம் விநியோகித்து வருகிறது. 

ரேசன் கடை பொருட்களை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக் கான ஏழைகள் இந்த மாவட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 12–ம் தேதிக்குள் மொத்த பண்டக சாலையிலிருந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பாமாயில் இன்று தேதி வரை அனுப்பபடவில்லை. 

இதனால் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த மாதம் பாமாயில் வழங்கப்பட வில்லை என்று புகார் வந்துள்ளது.

குறிப்பாக இராமநாதபுரம் நகர், இராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் போன்ற பகுதிகளில் சமையல் எண்ணெய் ரேசனில் வழங்கப்படவில்லை. 

எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு சமையல் எண்ணெய் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to “இராமநாதபுரம் ரேசன் கடைகளில் பாமாயில் தடை: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலெக்டரிடம் புகார் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT