20 December 2013

வெளிநாடு அனுப்புவதாக ரூ.21 லட்சத்தை ஏமாற்றிய புதுவலசை சேர்ந்த தாஜுதீன் கைது

 வெளிநாடு அனுப்புவதாக ரூ.21 லட்சத்தை ஏமாற்றிய
புதுவலசை சேர்ந்த தாஜுதீன் கைது 



இராமநாதபுரம்:

                வெளிநாடு அனுப்புவதாக கூறி பலரிடம் ரூ.21 லட்சத்தை ஏமாற்றிய வரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.21 லட்சம்

இராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் தென்னரசு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த போது புதுவலசை மேற்குத் தெருவை சேர்ந்த அப்துல் ரகீம் என்பவரது மகன் தாஜுதீனுடன் பழக்கம் ஏற்பட்டது. 

அப்போது தென்னரசுவிடம் தாஜுதீன் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்க ஆட்கள் தேவைப்படுவதாகவும், இதற்கு தேவையான நபர்களை அனுப்பும்படி கூறியுள் ளார்.

இதைத்தொடர்ந்து இருவரும் இராமநாதபுரத்துக்கு வந்த நிலையில் தாஜுதீனின் பேச்சை நம்பி தென்னரசு தனக்கு தெரிந்த 65 பேரை சிபாரிசு செய்தாராம். இவர்களிடம் ரூ.21 லட்சம் பெற்றுக்கொண்ட தாஜுதீன் தான் கூறியபடி ஆட்களை அனுப்பி வைக்கவில்லையாம். 

இது குறித்து தென்னரசு இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தாஜுதீனை தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மாரக்கோணம் பகுதியை சேர்ந்த கில்பர்ட் நிக்சன் என்பவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.50,000 மோசடி செய்த வழக்கில் தாஜுதீனை கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாஜுதீனை இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜ கோபால், ரவீந்திரன் ஆகி யோர் அழைத்து வந்து இராமநாதபுரம் ஜே.எம். எண்-1 கோர்ட்டில் நீதிபதி பழனியம்மாள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

0 Responses to “ வெளிநாடு அனுப்புவதாக ரூ.21 லட்சத்தை ஏமாற்றிய புதுவலசை சேர்ந்த தாஜுதீன் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT