8 December 2013

ஏற்காடு தேர்தல்: 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி

ஏற்காடு தேர்தல்: 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி



ஏற்காடு:


                ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி தி.மு.கவை விட அ.தி.மு.க. 74,116 ஓட்டு அதிகம் பெற்றது

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் மரணம் அடைந்ததால், அத்தொகுதிக்கு கடந்த 4–ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் மறைந்த பெருமாளின் மனைவி பி.சரோஜா அ.தி.மு.க. வேட்பாளராகவும், தி.மு.க. வேட்பாளராக வெ.மாறன் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் என 11 பேர் போட்டியிட்டனர்.ஏற்காடு இடைத்தேர்தலை தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.இதனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.–தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது.

ஓட்டு எண்ணிக்கை

ஓட்டுப்பதிவின்போது ஆண்களும், பெண்களும் திருவிழா கூட்டம் போல அலை அலையாக வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்களில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 406 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு 89.24 சதவீதம் ஆகும்.இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று நடந்தது.21 சுற்றுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் பி.சரோஜா மற்றவர்களைவிட அதிக ஓட்டுகள் பெற்று வெற்றிப்பாதையில் வேகமாக நடை போட்டார். தி.மு.க. வேட்பாளர் மாறன் 2–வது இடத்திலேயே இருந்து வந்தார்.

அமோக வெற்றி

அ.தி.மு.க. வேட்பாளர் பி.சரோஜா 21–வது சுற்றில் 78 ஆயிரத்து 116 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 771 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கு 64 ஆயிரத்து 655 ஓட்டுகள் கிடைத்தது. இதனால் தி.மு.க. டெபாசிட் இழக்கவில்லை.மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்ஓட்டு எண்ணிக்கை மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் பி.சரோஜா வெற்றி பெற்றதை தேர்தல் நடத்தும் அலுவலர் சபாபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் அவர், அ.தி.மு.க. வேட்பாளர் பி.சரோஜாவிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

ஓட்டு முழு விவரம்

இந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விவரம் வருமாறு:–

மொத்த வாக்காளர்கள்– 2,40,290

பதிவான ஓட்டுகள் – 2,14,406

ப.சரோஜா (அ.தி.மு.க.)– 1,42,771

வெ.மாறன் (தி.மு.க.) – 64,655

எஸ்.ஏ.பழனி (சுயே.) – 662

எம்.பழனிசாமி (சுயே.) – 196

கே.பழனிவேல் (சுயே.) – 97

கே.பூபாலன் (சுயே.) – 117

இ.பொன்னுசாமி (சுயே.) – 110

சி.மணிகண்டன் (சுயே.) – 169

கே.மதியழகன் (சுயே.) – 223

ஏ.ராஜாக்கண்ணு (சுயே.) – 181

ஏ.ராஜேந்திரன் (சுயே.) – 793

நோட்டா – 4,431

செல்லாதவை– 1 (தபால் ஓட்டு)


ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. முன்னணி நிலவரம் வெளியானதும் போயஸ் கார்டனில் உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்த போது எடுத்தபடம்.

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றதையொட்டி சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பெண்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்கள்.

0 Responses to “ஏற்காடு தேர்தல்: 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT