10 December 2013

தனுஷ்கோடி விநாயகர் கோவில் கல் உடைப்பு: வரலாறு அழியும் அபாயம்

தனுஷ்கோடி விநாயகர் கோவில் கல் உடைப்பு: வரலாறு அழியும் அபாயம்



இராமேஸ்வரம்: 

                    தனுஷ்கோடி புயலில் அழிந்து போன, விநாயகர் கோவிலில், சுண்ணாம்பு, செங்கற்களை பெயர்த்து எடுப்பதால், வரலாற்றுச் சின்னம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 1964ல் அடித்த புயலில், வணிக நகரமான, தனுஷ்கோடி அழிந்தது. 1,000 உயிர்களை பறித்த அச்சம்பவம், தேசிய பேரிழப்பாகும். ஆனால், அங்கிருந்த மாதா சர்ச், ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, விநாயகர் கோவில் சேதமடைந்தன. புயலில் அழிந்த இவை, இன்னமும் வரலாற்று சின்னமாக விளங்குகின்றன. 

தற்போது, இங்கு வசிக்கும் மக்கள், வீடு, கடைக்கு தரை தளம் அமைக்க, உருக்குலைந்த விநாயர் கோவிலில் உள்ள, சுட்ட சுண்ணாம்பு கல், செங்கற்களை பெயர்த்து எடுத்து செல்கின்றனர். கோர புயலில் தாக்கு பிடித்த கட்டடம், மனித தாக்குதலில் இருந்து தப்பிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமேஸ்வரம் தாசில்தார் மீனாட்சி கூறியதாவது: தனுஷ்கோடி புயலில் சேதமடைந்த கட்டடத்தில் இருந்து, கற்களை உடைத்து எடுப்பதாக புகார் வரவில்லை. நாளை, வருவாய் ஆய்வாளரை, தனுஷ்கோடிக்கு அனுப்பி ஆய்வு செய்து, கற்கள் உடைத்து எடுத்து இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

0 Responses to “தனுஷ்கோடி விநாயகர் கோவில் கல் உடைப்பு: வரலாறு அழியும் அபாயம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT