11 December 2013

வாகனங்களில் சிவப்பு விளக்குகள் பயன்படுத்த நிபந்தனை: தவறாக பயன்படுத்துவதை தடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாகனங்களில் சிவப்பு விளக்குகள் பயன்படுத்த நிபந்தனை
தவறாக பயன்படுத்துவதை தடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


 புதுடில்லி: 

              'அரசியலமைப்பு சட்டத்தின் படி, மிக மூத்த பதவி வகிப்பவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் மட்டும், சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நிபந்தனை விதித்துள்ளது. மேலும், 'உள்ளூர் அரசியல்வாதிகள், தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களில், சிவப்பு சுழல் விளக்குகளை, சிலர் தவறாக பயன்படுத்துவதை, தடுத்து நிறுத்த வலியுறுத்தி, உ.பி., மாநிலத்தை சேர்ந்த, அபய் சிங் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

முழு பட்டியல்:
                  இந்த வழக்கு, நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், தங்கள் உத்தரவில் கூறியதாவது: வாகனங்களில் சிவப்பு விளக்கு பொருத்திக் கொள்ள தகுதியுள்ளவர்கள், யார் என்ற விவரம் அடங்கிய முழு பட்டியலை, மத்திய அரசு, புதிதாக தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் அமைப்பு சட்ட வரம்புக்குள் வரும், பதவியில் உள்ளவர்கள் மட்டுமே, சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த விதிகளை, மூன்று மாதத்திற்குள், அரசு அமல்படுத்த வேண்டும்.

சமுதாயக் கேடு:
            மத்திய அரசு அளிக்கும் பட்டியலை, மாநில அரசு, அப்படியே பின்பற்ற வேண்டும். இதை, மாநில அரசுகள் விரிவுப்படுத்தவோ, நீட்டிக்கவோ கூடாது. இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், 'முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும், சிவப்பு சைரன் விளக்கு கவுரவத்தை, சிலர் தவறாக பயன்படுத்தி, சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்றனர். இத்தகய செயல்களுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு இருந்தது.

வாகனங்களில் சுழலும் சிகப்பு விளக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள்

* ஜனாதிபதி
* துணை ஜனாதிபதி
*தலைமை நீதிபதி
*பிரதமர்
*சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
*லோக்சபா சபாநாயகர்
*மத்திய அமைச்சர்கள்
*திட்டக்கமிஷன் துணைத் தலைவர்
*எதிர்க்கட்சி தலைவர்கள் (லோக்சபா, ராஜ்யசபா)
*ஐகோர்ட் தலைமை நீதிபதிகள்
* மாநில கவர்னர்கள்
*துணைநிலை கவர்னர்கள்
*மாநில முதல்வர்கள்
*எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் தலைவர்

வெறும் சிகப்பு விளக்குக்கு அனுமதிக்கப்பட்டவர்கள்

* தலைமை தேர்தல் கமிஷனர்
*தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி
*ராஜ்யசபா துணை தலைவர்
*லோக்சபா துணை சபாநாயகர்
*திட்டக்கமிஷன் உறுப்பினர்கள்
*அட்டர்னி ஜெனரல்
* கேபினட் செயலர்

மஞ்சள் விளக்கு

* தலைமை செயலர்
*வருமான வரித்துறை கமிஷனர்
*மாவட்ட நீதிபதி
*டி.ஜி.பி.,

ஊதா நிற விளக்கு

* ஆம்புலன்ஸ்
*போலீஸ் வாகனங்கள்

1 Responses to “வாகனங்களில் சிவப்பு விளக்குகள் பயன்படுத்த நிபந்தனை: தவறாக பயன்படுத்துவதை தடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு”

Maatamil said...
11 December 2013 at 11:55

தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

http://maatamil.com

நன்றி


Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT